கடலில் வெறும்
தண்ணீர் மட்டும்
குடித்துவிட்டு எழுதியவன்
கடல் வெறும் உப்பு
என்றுதானே எழுதுவான்.
அதை படித்துவிட்டு
உள்ளே இறங்க மறுத்தால்
முத்து கிடைப்பது எப்போது.
போலிகளையும்
கோழைகளையும் பார்த்தால்
மெய் காதல் தெரியாது.
ராசாயணம் என்று தெரிந்தும்
அழகு நிலையம் நிற்கவில்லை
மரணம் என்று தெரிந்தும்
புகைப்பவர் குறைந்தபாடில்லை
ஒரு தந்தி துக்கம் தந்ததற்காக
மொத்த தந்தியும் நின்றுவிடவில்லை
பின் ஏன்
வருகின்றக் காதலை
தோற்றுப் போனக்
காதலோடும்
போய் போலி கோழைக்
காதலோடும் ஒப்பிட்டு
கிடைக்கும் புதையல்
தொலைக்கீரீர்
தேர்வுகள்
தோல்விகள் வழி
பாடம் சொல்லத்தான்
வீழாமல் நடந்த
குழந்தை உண்டா?
ஒரு உண்மைக் காதலை
வாழ வையுங்கள்
காதலென்றால் எது என்று
அது சொல்லும்!
Nice work...
ReplyDeleteFantastic one dude...Appreciate your thinking
ReplyDelete