Sunday, January 15, 2012

பொங்கல் இனிக்குமா?





















பெருகிப் போன
        ஜன நெரிசலால்
        விலை நிலமெல்லாம்
        வீடாச்சு.
         பசுமையான விவசாயத்த
         தொலச்சாச்சு...

உருவாக்கிய இயந்திரத்து
         புகையால கழிவால
         மண்ணும் நீரும்
          நஞ்சாச்சு...

உயிர்கூறு ஆராய்ந்து
          ரகம் ரகமா
          வித கொடுத்தான்
          விஞ்ஞானி...
           ரசாயன உரத்தால
           வீடு செர்ந்துடுச்சு
           குறைஞ்ச காலத்துல
           விளைச்சலும்....

ஏழை விவசாயிக்கு
           எதோ புண்ணியத்துல
           இந்த வருஷம்
           பொங்கல் இனிப்பாத்தான்
பொங்கிருச்சு...

ஆனா அடுத்த வருடம்?
          அம்மிக் கல்லையே
          ஆட்டிப் புடும்
          ஆடிக் காத்து
          ஓடிப்போச்சு

           அணைக்கட்டுகளின்
            மதிலுடைக்கும்
            அப்பிகை மழ
            கண்மாய் கரைகளிடம்
            தோத்துப்போச்சு

            கரைகொள்ளா நீரோடிய
            ஆத்துக்குள்ள
            சக்கரா ரேகைகளோடுது
            மணலே வித்துப் போச்சு
            நீரு எங்க நிக்கும்?
       
            இயற்கையில் மாறாதது
            கிழக்காம உதிச்சு
            சூடு மாறாம
            நிக்குற சூரியன் தான்...
            காலம் மாறிப்போச்சு
            காணாம மாரிப்போச்சு
            பசுமை வறண்டு போச்சு        
            பசு மடியும் சுருங்கிப் போச்சு...
            அறிவியலுக்கு எட்டாத
            நோயக் கூட நொடியில் போக்கும்
            மூலிகை இருந்துச்சு
             மண்ணோடு மக்கிப் போச்சு
             மக்காத பலவிசயம்
             இங்க நிலச்சு போச்சு...
               

            தேன் சுரந்த
            மலர்கள் கொஞ்சம்
            நஞ்சை சுமக்குது.
            நதி ரேகையில்
            ஓடும் கொஞ்சூண்டு
            நீரில் கூட
            இரசாயனம் இருக்குது.
         
பாழாக்க ரொம்ப
            நாளாகல...
புதிதாக்க நேரம் இங்க
            ரொம்ப இல்ல...
அழிக்க யோசிக்கல
             ஆக்க இன்னும் என் யோசனையோ!
 
ஆறு மாதம் தாமதம
விளைச்சல் வீடு வந்தாலும்,
 வேகமா அது எல்லாம்
அழுகிப் போனாலும்,
விளைச்சல் கொஞ்சம்
குறவா இருந்தாலும்...
திரும்பத்திரும்ப விதகிடைக்க
இயற்கை  வித, இயற்கை உரம்
பயன்படுத்து...

நிச்சயமா  அடுத்த
உழவர்தினமும்
உனக்கு  இனிப்பாவே இருக்கும்...

தொழர்க்களே! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பி.கு. - ஆங்கிலப் புத்தாண்டன்று "happy new year" சொல்லும் உதடுகளே! தமிழர் திருநாளன்று தமிழில் வாழ்த்துங்கள் "happy pongal" வேண்டாமே...


              





No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்