காதல் ஒருவரம்
உயிர் போகும்
தவம் வேண்டும் இதற்கு
தவமின்றி
சிலருக்கு இங்கே
கிட்டிடையில் அருமை
இழந்து போகுது வரம்
அர்த்தமில்லாத சண்டைகள்
காரணம் கேட்டால்
சண்டை இல்லை அது
இலக்கியம் சொல்லும்
ஊடல் இது என்கிறது
முட்டாள் தனம்
தேவை இல்லா சந்தேகங்கள்
சொன்னால்
சந்தேகம் இல்லை அது
காவியம் சொல்லும்
தன்னுடமை காக்கும்
காதல் பதற்றம் என்கிறது
முட்டாள்தனம்
பசியில் உலகம் போராடும்வேளையிலும்
குப்பைத் தொட்டியில் வீணாகும் உணவு
குறையாதது போல்
உண்மைக் காதல்கள் ஒருதலையில் நின்று இறக்கும் நிலையிலும்
கிடைத்த காதலை
இல்லாத காரணம் சொல்லி
கொன்றுக் குவிக்குது
உண்மைக் காதலே
காதலோன்றும் பிறவிக் குருடல்ல
காதலர்களால் குருடாக்கப்படுகிறது
காதல் சிவம் என்றால்
குருடான சிவனுக்கு
கண் கொடுக்க
அறிவுக் கண்ணப்பன்
என்று வருவான்!
No comments:
Post a Comment