"பழைய பஸ் ஸ்டாண்டுல
இறங்கிட்டியா?
நேரா இருக்குற
தெருவுல நுழை
10 கட்டிடம் தள்ளி
குப்பையா கிடக்குதா
அதுக்கு பக்கத்துல
போரா ரோட்டுல வா
சேறும் சகதியுமா
இடப்பக்கமா ஒரு தெரு
போகுதா?
அதுல 3வது
மாடி வீடுதான்
என் வீடு"
இப்படி தினம்
நண்பனுக்கோ உறவுக்கோ
வழி சொல்லையிலோ
காலையில் அவசாரமாய்
அலுவல் செல்லையிலோ
நாட்டின் அவலங்களை
பேசியும் கடந்தும்,
உரைக்காத
அளவு மக்கள்
தப்போடு ஒற்றிப்
போனதாலோ, என்னவோ?
உழலுக்கு கைதாகி
வெளி வருபவன்கூட
சிரித்துக் கொண்டே வருகிறான்
கூசாமல் மந்திரி ஆகிறான்
தேசம் நாசமாகும் கலிகாலம் இது
[பாமர மொழிக்காய் வேற்று மொழி கலந்தேன். மன்னிக்கவும்]
No comments:
Post a Comment