முதலாளி முதலைகள்
வரி எய்த்த பணமெல்லாம்
அவன் மகன் cafe dayஇல்
150 காபியாய் நா நனைக்குது
சினிமா டிக்கட்
நீள் வரிசையிலும்
ரசிகனாய்
தலைவன் வரும்வழியிலும்
பக்தனாய்
தெய்வ ரதவுலா வீதியிலும்
கால் கடுக்க நிற்க
யோசிக்காத கூட்டம்
சாலை சந்திப்பில், சிக்னலுக்கு
நிக்க யோசிக்குது ஏனோ?
அங்கே இரண்டு
மாநிலம் சண்டையில்
இவன் இதோ வீணாக்கும்
இந்த ஒரு குவளை நீருக்காக
பசிக்கும் வயிறுகள்
அங்கே காய்ந்து கிடக்க, அதற்காய்
விழும் பருக்கைகளை விட
ருசி பார்த்து
குப்பைத் தொட்டிகளுக்கு
விசி எறியப்படும்
கவளங்கள் தான் அதிகம்
ஆழறிவைத் தேட வேண்டிய
கல்வி இன்று
வேலை பெற்றுத்
தரும் ஒரு மனுவாகிப் போனது
உழைக்க வேண்டிய
மக்களின் தொண்டன்
தலைவனாகிப் போனான்...
அவன் கட்சியிலயே மக்கள்
அவனுக்குத் தொண்டனாய்
உழைத்து ஓடாகிப் போனான்...
இதையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய
என் வீரத் தனம்
கோழையாய் முடங்கிப் போகுது
இதோ கவிதைகளில்
நம் தலைவிதியை
எழுதிய இறைவன்
மாற்றிக் கொள்ள
ஒன்றல்ல
10 பேனா கொடுத்துள்ளான்
விரல்களாய்...
மாற்றம் எங்களுக்கு
ஆட்சிகளில் வேண்டாம்
வெறும் கட்சிப் பெயர்களில்
மட்டுமே இருக்கும்
மறுமலர்ச்சியிலும் வேண்டும்
சமுதாய உணர்வு சுய தேவைகளுக்கு இடையில் சவமாகிவிட்டதை உணர்த்துகிறது உன் வரிகள் தோழா
ReplyDeleteஇது சுழல் சொல்லும் வரிகள் தோழா...மாற்ற வேண்டியவைகள்
Deleteநன்பரே நான் தங்களை என் பிலாகில் குறிப்பிட்டிருக்கிறேன்.நான் தங்களுக்கு வழங்கியுள்ள விருதை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeletehttp://vijayandurai.blogspot.in/2012/04/blog-post.html
நன்பரே நான் தங்களை என் பிலாகில் குறிப்பிட்டிருக்கிறேன்.நான் தங்களுக்கு வழங்கியுள்ள விருதை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeletehttp://vijayandurai.blogspot.in/2012/04/blog-post.html
மாற்றம் தரும் சிந்தனைகள், நிச்சயம் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் தோழரே!
ReplyDelete