நிலவும் துகளாகத் தயார்
அடுத்த பிறப்பு
உன் கைகளால் கோலமாகும்
மாவென்றால்
அழகி உந்தன்
ஆட்டோகிராபை
தன் மார்பில்
வாங்கிக் கொள்ளுது பூமி
இன்றுதான் நானறிந்தேன்
பூமியிலும் வானவில்
தோன்றுமென்று அறிந்தேன்
உன்னாலே!
அழகே! அழகாய்
கோலம் போடுவதைக்
குறைத்துக்கொள்
அப்புறம் பொன் விலைக்கு
போட்டியை உன்முற்றத்து
மண் விலையும் ஏறிப்போகும்
எழிழே! உன் திறம்
இறைவன் அறிந்திருந்தால்
உன்னைத்தான் உலகம்
படைக்க கேட்டிருப்பான்
No comments:
Post a Comment