1966 தமிழக கரை வந்த
ஒருப் புயல் இன்றும்
லட்சோபக் கோடி
இதயங்களை நனைக்கிறது
இசை மழையால்
தமிழ் மறந்த
நவீன மங்கைகளின்
வாரிசுகளைத் தாலாட்டும்
இவன் இசை
காதலியின்
சுடு வார்த்தைபட்ட
இதய காயங்களை
இறகுகளால் வருடும்
இவன் இசை
காதலைப் பெற்ற
இதயத்தை
இமய உச்சம் ஏற்றும்
இவன் இசை
வாழ்வை வெறுத்தவனை
வாழத் தூண்டும்
இவன் இசை
வாழ்வை வென்றவனை
மேலும் மெருகேற்றும்
இவன் இசை
உலகம் மெய்மறக்கும்
கண்ணனின் குழலிசையில்
அவனும் மெய்மறப்பான்
இவன் இசையில்
இவன் இசை கலையில்
கலியுக ராவணன்
ராவணனுக்கும் இவனுக்கும்
இரு வித்தியாசம்
ராவணன் அகந்தைக்காரன்
இவன் இல்லை
ராவணன் இசையால்
இமயத்தைதான் அசைத்தான்
இவன் உலகையே அசைத்தான்
இவனுக்கு விருதாகி
ஆஸ்கார் தன்னை
கவுரவப் படுத்திக்கொண்டது
தாயின் பாசம் கசியும்
தாலாட்டை இருவரால் தான்
98 விழுக்காடு நிகர் செய்யமுடிந்தது
ஒன்று இசைஞானி
மற்றொன்று இசைப்புயல்
இவன் இசைக்கு
மொழி மத தேச
எல்லை இல்லை
என்று உலகில்
அழுத்தி எல்லோர்
இதயத்திலும் எழுதியவன்
இசையே
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
[06 Jan 2012]
No comments:
Post a Comment