புணர்தலின் வலிகளை சுகம் என்னும் கூட்டம்
உணர்வின் வழிகளை வலி என்பதில் வியப்பென்ன...
உலகம் செய்யப்பட்டதென்னவோ அன்பாலே.
உயிர்களில் பல செய்யப்பட்டதென்னவோ
வெறும் கட்டில் சுகத்தால் தானே...
அதான் அதை தேடும் அவர்களின்
இயல்பிலிருந்து பிறழ்பவர்கள்
தீட்டாகிப் போனார்கள் காதல் உட்பட...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
புத்தகமோ... புத்தக கணினியோ....
மூடி வைத்து நிமிர்ந்து பார்.
அறிவு அளவில்லாமல் கிடக்குது...
உலகம் ஒரு விதிகள் இல்லாத நூலகம்.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
பிடிக்காதவர்களைக்
கொல்லவேண்டுமென்று நினைத்தால்
உன்னை கொல்லும் நாளும் வரும்...
கொடியவனைக் கண்டு
தூர விலக வேண்டுமென்றால்
இந்த உலகத்தை காலி பண்ணவேண்டும்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
உன்னால் இன்று
என் சிரிப்புதான்
பெரிய பொய்யாகிப் போனது.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
உச்சரித்தாலே சுடுகின்றத் தீ - காதல்...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
என் முகப்புத்தகச் சுவர்
என் கவிதைப் பக்கங்கள்
உன் காதுகளாக ஆக ஆசைப்படுகிறேன்
நான் சொல்வதை இதயத்தில் பதித்துக் கொள்கிறது
அதுமட்டும்தான் மறுக்காமல்...
No comments:
Post a Comment