Tuesday, March 13, 2012

தமிழ் கேட்குமா?


8 கோடி செவிடர்கள்
வாழும் தேசமே!
செம்மொழி இருந்தும்
ஊமையான அவலமே!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற கவிதைகள் இன்று
என் சகோதரனின் படுகொலையை
வேடிக்கை பார்க்கும் வெட்கம்...

தானாடாவிட்டாலும்
தன் தசையாடிய தமிழன்
இன்று தன் வீட்டில் சவம் விழுக
தானே  ஒருக் காரணமாய்...

செருப்படிபட்டவன்
கிறுக்கு  மொழி பேசுகிறான்
அது தோழமைதேசத்தின்
மதசார்ப்பின்மைக்கு பங்கம் என்று
உன் உறவின் கருவருக்கையில்
இவனின் அறங்கள்
அரசு  முறை பயணமா போய் இருந்தது?

ஈராக்கையே தீக்கிரையாக்கிய
அமெரிக்கனின் கண்களிலேயே
கண்ணீர் தந்த ஈழத்து மரணம்
உனக்கு  மட்டும் ஏனோ
ஆயுதம் விற்கும் வியாபரமாய்த்
தெரிவது ஏனோ?


 
மகன் புறமுதுகிட்டான் எனக்கேட்டு
பாலூட்டிய மாரருக்கத் துணிந்த
தமிழச்சி வாழ்ந்த தேசம்...
பணத்துக்கு ஆசைப்பட்டு
தன் உறவுக்கு விசமூட்டும் வேசம்...

பிரங்கிக்கு  மார் நிமிர்த்திக் காட்டி
மறத்துக்கு புதிதாய் அறம் சொன்ன தேசம்...
ஒற்றை  வீரனை 100 பேர் கொல்லும்
கோழைத்தனத்திற்கு  சாமரம் வீசும் வேஷம்...


கொட்டும் தேழையும்
காத்த ரமணன் பிறந்த மண்ணே
எறும்பை நசுக்குதலும்
பாவம் என்றெண்ணிய புத்தன் தேசமே
300 ஆண்டு வேரிட்ட ஆங்கிலய ஆழையே
ஒரு விரதத்தில் விரட்டிய அகிம்சை கருவரையே
இன்று உன் சகோதரனின்
படுகொலை எதிர்த்து
பேச  ஒரு குரல் இல்லாத
அவலம்  ஏனோ?

முகம் தெரியா பெண்ணின்
முகப் புத்தக சுவரில் "cute"
எழுதும்இளைமையே...
இரண்டாம்  மனைவி கட்டுவதேப்படி,
மாமியார் மருமகள் எதிராளியாவதேப்படி
என்று வேண்டா பாடம் சொல்லும்
நெடுந்தொடர்க்கு  ஓடும் கண்ணீரே...
பங்குச் சந்தையின் சரிவுக்கும்
சாலை நீள நெரிசளுக்கும்
மட்டும் அரசை நொந்துகொள்ளும்
குடும்பத்  தலைமையே...
தலைவன் சொல்லியதை
டிக்கெட்டோடு கிழித்துப் போட்டு
அடுத்த கட்டவுட்டுக்கு பால் தேடும் ரசிகனே...
தமிழைக்  கொள்ளும் கொலைவெறி பாடலென்று
முட்டாள்  ரசிகனின் மூளையில்
பணம் அருவடைசெய்யும் ஊடகமே...

கார்கிலில்  எதிரியின்
புறமுதுகு  பாரத்த வீரம் எங்கே?


இன்னும் இந்த தேசத்தில்
எஞ்சி இருக்கும் மக்களாட்சியை
தூசி தட்டுங்கள்...
என் ஒரு கையேடு சேர்ந்து ஓசை தாருங்கள்

அவன் மரணத்தைதான் தடுக்கவில்லை
மனுநீதியின் வாரிசுகளே...
அவன் படுகொலைக்கு தர்மமாவது
கேட்போம் வாருங்கள்...

2 comments:

  1. சகோதரனை காக்கத்தான் தவறி விட்டோம்
    தமிழினமே அவன் மரணத்துக்காவது மனுநீதி கேட்போம்
    எழுந்து வாராய்.....

    ReplyDelete
  2. தமிழன் மட்டும் தான் தன்னை இந்தியன் என்று அடையாளம் காட்டிக்கொள்கிறானே தவிர நம்மை யாரும் இங்கே இந்தியனாக பார்ப்பதில்லை.... நம் தமிழினத்தின் உணர்வுகளை ,,,அவர்கள் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக திரும்பிய பிறகும் ,,,சொந்த நாடாய் சேர்ந்த ஒரு இனமே அழிக்கப்பட்ட போதும் ..இந்த இந்திய அரசு நம்மை உணரவில்லை.... இந்த இந்திய ஒரு பெரும் ஜனநாயக நாடாம்.... மனித நேயம் நிறைந்ததாம் ... காலக்கொடுமை நாம் இங்கே பிறந்தது... 60 ஆண்டுக்கு முன் வெள்ளைக்காரன் பேர் வைத்து கொடுத்துதானே இந்த இந்தியா... அவன் எப்படி அறிவான் 20000 ஆண்டு பழமையான தமிழின வரலாற்றை ...தமிழா உனக்கு துணை தமிழனே.... நிச்சயம் நீதி கிடைக்கும்..... அது வரை தளர வேண்டாம்...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்