மாதராய் பிறந்திட மாதவம் செய்தவளே 2011
படைத்தவனையே
படைத்தவள் - தாய்
கிடைத்ததெல்லாம்
பகிர்ந்தவள் - தங்கை தமக்கை
தோள்களில்
என் அன்னைக் கருவறையுடன் - தோழி
நான் தேடிய இன்னொரு பாதி
மேல் சொன்னவர்களின் நகல் - என் காதலி
தனக்காக படைக்கப்பட்ட வாழ்க்கையை
எனக்காக கொடுத்தவள் - என் மனைவி
நிச்சயம் இந்த மாதர்களுக்காய்
நீ மாதவம் செய்திட வேண்டுமட...
மின் விசிறிக்கும் க்கிரைன்டர்க்கும் கூட
மின்வெட்டில் ஓய்வு கிடைத்து விடுகிறது...
பெண்ணாய் பிறந்தவளின்
வாழ்வில் ஓய்வென்பது
மிகக் குறைவே...
காலம் சவாலிடும்
அடுப்பூதும் உனக்கெதுக்கு
படிபென்று...
உடன் படித்தவர்கெல்லாம்
சவாலாகிப் போனாள்
"புகுந்த வீட்டில்
எப்படி பிழைக்க போகிறாய்"
என்ற பெற்றவள் வார்த்தை
துரத்த ஓட ஆரம்பித்தவள்...
உலக்கை இல்லாத
மெலிந்த உரல் இவள்
இருந்தும் இடி படுகிறாள்
மாமியார் விரல்களில்...
கணவனின் பசிக்கு
விருந்தாகிப் போனவள்...
குழந்தையின் அழுகைக்கு
ரத்தத்தை பாலாக்குவாள்...
இயல்பை புரட்டிப்போட்டவள்
பெண்கள் நுழைய
முடியாதென்றிருந்த துறைகளிலெல்லாம்
பெண்கள் இல்லாமல் முடியாதென்றொரு
இலக்கை எழுதிக் கொண்டிருப்பாள்...
பெண் - உன் வாழ்க்கைக் கவிதையின் பொருள்
ஆண் காகிதம் இவள் அழகாக்கும் ஓவியம்
பெண்ணில்லாத நீ
சிலைகள் இல்லாத கோவிலாய்
மின்வெட்டு நேரத்து சென்னை இரவாய்
எந்த மொழியிலும் தேடிப்பார்
அவன் என்ற வார்த்தைக்கு
நிச்சயம் அவளென்றொரு பொருளிருக்கும்
என் வாழ்விலும் பொருள்சேர்த்த பெண்ணே(களே)
இனிய மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்
Varigalil pothindha unmaiyai, rasikiren thozha.
ReplyDeleteAvan andri orr anvum asaiyathu,
aval andri unn valvil porul yethu.. enbathai unarthi vittai unn varigalal :)