எதிர்பால் வெறும்
காமக் கண்
பார்வையாய் பார்ப்பவனுக்கும்,
இன விருத்திக்காய்
இணையை தேடும்
அஃறிணைக்கும் வித்தியாசம்
வெறும் ஒரு அறிவு...
உச்சரிக்கும் வார்த்தைகளால்
நிச்சயம் யாருக்கோ காயம்
தெரிந்தும் உதிர்கிற வார்த்தைக்கும்
பாதங்களை காயமாக்கும்
பாதை முட்களுக்கும் வித்தியாசம்
ஒரே ஒரு உயிர்...
அடிபட்டு ஒரு உயிர்
துடிதுடித்துக் கிடக்கையில்
சுற்றி நிற்கும் உடல்களுக்கும்
அவன் ரத்தத்தில் மொய்க்கு ஈக்கும்
வித்தியாசம் ஒரு பெயர்தான்
நொடிக்கொருவனு(ளு)டன்
காதல் என்ற பெயரில்...
மணிக்கொருவனிடம்
விபச்சாரம் என்ற பெயரில்...
வேசிக்கும் வேசக் காதலுக்கும்
வித்தியாசம் ஒரே ஒருவார்த்தை...கற்பு
ஆறறிவு உடல்களுக்கும்
அஃறிணைகளுக்கும் வித்தியாசமாய்
ஒரு பகுத்தறிவு...
பகுத்தறிந்து பகுத்தறிந்து
இனம் சிதறிக்கிடக்குது சாதி என்னும் பெயரில்
அந்த வித்தியாசமே
இன்று அவனை அஃறிணையாக்கிவிட்டது
நியாயமான எண்ணங்கள் !
ReplyDeleteAwesom :)
ReplyDelete