Dedicated to all Engineers, Technicians and Workers
Who build this world
Who build this world
நேற்று......
இவன் பக்தன்
இல்லா கடவுள்
நிகர் செய்ய முடியா
கலைஞன்
தான் ஆக்கிய
அகிலத்துக்காய்
சனம் உருவாக்கியவன்
கடவுள்
உருவாகிய உடல்களுக்காய்
அகிலத்தை
அழகாக்கினான் இவன்
பலர் பசிக்காய்
கல் கொண்டு
காயப் படுத்தி
பசுங் கறி கொள்கையில்
உரசிய கல்லில்
கனல் கண்டான்
துரத்திய பசிக்காய்
தூரம் ஒடித் திரிகையில்
ஒருவன் உருண்டு ஓடிய
கல் ஆராய்ந்து
கண்டறிந்தான் சக்கரம்
நரிகள் போல்
ஊளையிட்டு
காற்றில் கலந்து
எண்ணம் பகர்ந்த காலத்தில்
ஒருவன் எரியும் நெருப்பாலும்
திரியும் புகையாலும்
செய்தி சொன்னான்
தொலை தூரத்துக்கும்
பலர் குளிருக்கு சுகமாய்
கம்பளி தேடுகையில்
ஒருவன்
கம்பளி உரசிய
ரப்பர் துணுக்கில்
நிலை மின்சாரம் கண்டான்
நாள் இருண்டதும்
அன்று முடிந்ததாய்
எல்லோரும் தூங்கிப் போகையில்
ஒருவன்
ஓடும் எலெக்ட்ரானை
சுருளுக்குள் நிறுத்தி
மின்னால் ஒளிரும்
சூரியன் தந்தான்
உட்கார்ந்த இடம் இருந்து
ஒருவன்
பூமி இருபுறம்
பிதுங்கிய கோலம் என்றான்
இரண்டு கண்ணாடி
அடுக்கி வைத்து
தூரங்கள் கடந்து
அண்ட வெளியின் அழகை
கண்களால் அளக்க
வைத்தான் ஒருவன்
மற்றொன்றை சார்ந்தும்
மற்றான் உயிர்
உரிந்தும்
நாம் இங்கே பசிக்காய்
போராடுகையில்
அங்கே ஒருவன்
அந்த போராட்டம் தான்
பரிணாமத்தை வளர்த்தது என்றான்
எரிகின்ற நெருப்பில்
நீர் சிறிது கொதிக்கையில்
ஆவது அவிக்க மட்டுமல்ல
என்ஜினை இயக்கவும் கூடும்
என்றான் இன்னொருவன்
பேயென்று பயமுறுத்திய
வியாதிகளை எல்லாம்
பென்சிலின் என்ற
ஒற்றை உச்சரிப்பில்
பட்டுப் போக செய்தான்
இன்னும் ஒருவன்
எப்படி வளர்ந்தான்
எப்படி வெளுத்தான்
எப்படி படித்தான்
என்று ஒவ்வொருவரும்
சுற்றத்தை வியக்க வைக்கையில்
எல்லாம் பொதிந்து கிடக்குது
உன் DNAக் குள்ளே
என்று உலகை எழுப்பிவிட்டான்
ஒருவன்
இப்படித்தான் துவங்கியது
இந்த என்ஜீனியர்
சகப்தம்
இன்று.......
கடல்களால் பிரிந்த
பூமியின் காதலை
கற்பனைக்கெட்டா
பாலனங்களால் சேர்த்தான்
வியாபார பிள்ளை
கப்பல் கால் கொண்டு
தவழ்ந்து விளையாட
நிலம் பிளந்து வழி தந்தான்
நீண்ட காலம்
காத்து பிரிந்து
கிடக்கும்
விண் மண் காதலை
சேர்க்க மண்ணுக்கு
கட்டட விரல்கள்
கட்டித் தீர்ந்தான்
பூமிப் பெண்ணின்
வனப்பில் மயங்கிப்
போனவன்
அவள் வளங்கள் ரசிக்க
கோடி கண்களை
வெளியில் சுற்ற விட்டான்
மனிதனை
பறவை ஆக்கினான்
நனையாமல் நீரில்
நீந்த வைத்தான்
அணுவை பிளந்தான்
இங்கு என் இதழ்கள்
முனங்கியத்தை
எழாயிரம் மைல்கள்
அப்பாலிருக்கும்
என் காதலின் பூங்காதுகள்
சேர்க்கும் கைப்பேசித்
தந்தான்
எட்டா(வது) கிரகங்கள்
தொட்டு
முட்டாள் மனிதன்
வாழும் அதாரம்
தேடித் திரிகிறான்
நாளை......
கணினிக்குள் காதல்
சிமுலேடட் காமம்
எட்டாவது பூமி
எண்ணூறு அதிசயம்
துளி மின்சாரத்தில்
தொள்ளாயிரம் கிலோமீட்டர்
பயணம்
யாருக்காக?
இருக்கும் பூமியை
சுடுகாடாக்கி
கிடைக்கும் பூமிக்குத்
தொடரும் போட்டு காத்து கிடக்கும்
அற்ப பதருக்காய்
தாய்மை தொலைத்து
அன்புக் காதல் புனிதம்
தொலைத்து
நட்பின் வாசம் சுயநல நாற்றமகிப்
போன புளுக்களுக்காய்
இப்படி கோடி கண்டறிவான்
தன் ஊரைத் தொலைத்து
தொலைவில் உறவை பிரிந்து
மாடாய் உழன்று
தன் நிகரில்லா
புனிதம்
மனித உருவில் கடவுள்
பொறியாளன் ... பெருமை பட வேண்டிய பிறப்பு
mudive illaatha nedumpayanam.. engineer.. pirarukkaai..
ReplyDeleteezhuththup pizhai neekkavum..
-- sullaankavi.. Virudhunagar