Thursday, November 24, 2011

ஊருக்குப் போறேன் I


புழுதிக் காட்டுக்காரன் மகன்

மென்பொருள்...
விளங்காதவனின் மகன்(ள்)கள்
அதை உலகுக்கு
விளக்கிக் கொண்டிருக்கிறோம்

தேன் சுறக்கும்
மலர்களை சுமந்த 
மரத்தில் கூடு கட்டி
வாழ்க்கையை மேடாக்கிடலாம் என்று
விழித்திருக்கும் கண்ணில்
கனவுகளை கரு சுமந்து
நெடுந்தூரம் வந்தவனில்
நானும் ஒருவன்

நிறுவனம்
ஒரு விசித்திர
அத்தி மரம்
வருடம் இதில் நிச்சயம்
12 முறை விடுமுறை
பூத்து விடும்...

சனி ஞாயிரோடு
சேர்த்து ஒன்றிரண்டு
பூக்கையில
ஒத்திவச்ச திபாவளி பொங்கல்
சந்தோசத்த ஒட்டுக்க 
கொண்டாடி தீர்த்துக்கணும்

அப்படி சேர்த்துவச்ச
சொச்ச மிச்சத்த
ஒரேயடியா தீர்க்கப்
போறேன்...
பத்து திங்க
வயித்தில் சுமந்த தாய
வாழ்வெல்லாம் மாரில்
சுமந்த தந்தைய
ரொம்ப நாளு கழிச்சு
பாக்கப் போறேன்
விடுமுறைக்கு ஊருக்குப் 
போறேன்...

ராவு நேரத்துல
ஓவர்டைம் பாக்குற
விளக்கு கண் விழிச்சு
வழி சொல்ல இல்லாத
இருட்டு ரோடுதான் 
இருந்தும்
ஓர வயலு வரப்புல
நெல்லு சேக்கும்
எலிக் குஞ்சும்
பெரிய குளத்துல
ஒட்டி நிக்கும்
கொஞ்சூண்டு தண்ணியில
கும்மாளமிடும் தவளையும்
வழி சொல்லும்
சொந்த ஊரு

தாரும் கருங்கல்லும்
குளைத்து கெட்டியா
போடப்படாத ரோடு தான்
உச்சி வெயிலுல
ஓரமா ஒதுங்கி நிக்கும்
வேம்பும் புளியம் மரங்க
நிழல என் பாதத்துக்கு
செருப்பா தரும்
ஊரு தான்

முடியாம நீளுகிற
பொம்பள பொழப்பு 
கண்ணீரப் போல
நீண்டு கிடந்து
கத கதையா சொல்லும்
பாத வழியா
உயிரைத் தேடி
ஒரு உடலு
தெக்காம கொள்ளும்
பயணம் இது...

குளச்ச மண் வச்சு
பாதமா பதனி சேர்த்து
ஆணையே இடிச்சாலும்
அசையாம நிக்குற
சுவரு வச்சு
சாணி மொழுகிப் போட்டு
கோமிய மருந்தும் இட்டு
அரிசி மாவால 
கோலம் போட்ட 
வீட்டுக்குள்ள வெறுந் தரையில
படுத்து பாரு
காதலிக்கிறவன்கூட 
கொறட்டையோடத் தூங்குவான்

சாஜெஹான் மட்டும்
ஒரு தடவ இங்க 
வந்திருந்தான் நிச்சயம்
மண்ணால தான்
தாஜ் மகாலே 
கட்டி இருப்பான்
அந்த சொர்க்கத்துல
ரெண்டு நாளு
நானு சுகமாத்தான்
தூங்கப் போறேன்

சந்தன சோப்பு
கத்தாழ சாம்பு போட்டு 
அடைச்சு வச்சத்
தண்ணிக்குள்ள ஆயிரம்
பேரு நீச்சலடிச்சு
குளிச்சோம் இத்தன நாளா

உச்சித் தொட்டு
உள்ளங்காலு வர
பூண்டு போட்டுக்
காச்சிய நல்லெண்ண
தடவிக்கிட்டு
சீகக்காயும், புன்க காயும்
பூந்திக் காயும்,வெந்தயமும்
போட்டு அரைச்சு
ஆத்தா தர
கரைச்சு தலையில
தடவிக்கிட்டு
பருத்திக்காட்டுக்கு பத்தியத்துக்கு
தண்ணி விடுகிற
மோட்டார் பம்பில்
குளிச்சுப் பாரு
வாழும் போதே
சொர்கத்த பார்க்கலாம்
அப்படியும் ஒரு நாளு
இந்த விடுமுறையில
குளிக்கப் போறேன்

அளவு சாப்பாடு
விதவித சாப்பாடு...
ஐயோ செத்துப்
போன நாக்குக்கு
புதுசா உயிரு
தரப் போறா 
என் ஆத்தா

5 மணிக்கே
என்ன பெத்தவன
எழுப்பி விடும் பாசம்
ஓடிப் போயி
மொத ஆடு
நல்ல இள ஆடு
அறுத்து...
பட்டினி கிடந்து
அவன் சேர்த்த காசுல
 அரக்கிலோ கறியும் 
கொஞ்சூண்டு ஈரலும்
தெம்பு ஏற நான் கடிக்க
நாலு நல்லி எலும்பும்
வாங்கி வந்து தருவான்

மிச்சத்தில் எல்லாம்
எனக்கு உயிர் கொடுத்தவ
கை தேர்ந்தவ
அம்மிக் கல்லுக்கும்
மசால் உரலும்
அவ மருமகளுக போல
அந்த ரெண்டு நாளு 
இடுப்பு ஓடிஞ்சுப் போக வேல

என்ன மாயம் செஞ்சாளோ
ரெண்டு நாளு
காலும் ஆளும்
ஊரு காடு சுத்தித்
திரிஞ்சாலும்
மூக்கும் நாக்கும் மட்டும்
அவ அடுப்பு பக்கமா
சீட்டு ஒன்னு போட்டு
உட்கார்ந்தே இருக்கும்

இன்டர்நெட்டும் கம்ப்யூட்டரும்
இல்லாத சுதந்திரம்

ஏசி விட்டு
தூசி இல்லாத காத்து
நாசி நிரப்பும் பாத்து

என் கூட
நிலாச்சோறு சாப்புட்ட
குட்டப் பாவாட குமுதா
ரெட்ட சடையில ஆள
ஆண்ட அனிதா
சைக்கிள் டயரு
வச்சு f1 ரேசு
விளையாண்ட வேலு
இப்படி சிதறிப்
போன உயிரை
மீண்டும் சேக்கப் போறேன்

அடி பட்டவன
பாதில ரோட்டுல
போட்டுட்டு
LOP*யே காப்பத்த
கரையான போல
ஆபிசுக்கு ஓடுற ஊரு
தாகமுன்னு சொன்னா
2 ரூபா வாங்கிக்கிட்டு
வியாதிய பிளாஸ்டிக்ல
தர்ற ஊரு
மேகம் சேர்ந்தா
அதிசயம மழையா விழுந்தா
உலகை மறந்து
உடமை நனைய
கொண்டாடும்
சுத்தந்திரம் இல்ல ஊரு
நம்ம ஊருக்குள்ள
வேற ஒருத்தன் வந்தான்
அவனுக்காக நாம
வாடக நாக்குல பேசுற ஊரு

இந்த பாசாங்கு எல்லாமே
வாழ்க்கை நாடகத்தில்
நானு போட்டுகிட்ட வேஷம்...
வேஷத்த 2 நாலு
அவுத்துப் போட்டுட்டு
பாசத்த பாசமா பக்கப் போறேன்

நானு விடுமுறையில
தவணை முறையில
என் உயிர பாக்க
போறேண்டா

ஐபோனு தேச்சு
சோர்ந்தது போன
விரல தும்பி பிடிக்க
வச்சு சொடுக்கு எடுக்க போறேன்

மின்சார போதையில
என்னத்த நான்
அடிச்சாலும் தப்புன்னு
சொல்லும் கம்ப்யூட்டர்
பாத்தக் கண்ணால
பாவட தாவணியோடு
துள்ளி வரும்
தமிழ் கவித
 படிக்கப் போறேன்

என் பெத்த
ரெண்டாவது தாயு...ஊருதான்
அவ மடியத் தேடிப் போறேன்...

*-Loss of Pay

2 comments:

 1. முதல் தாயாம் அன்னையையும்
  இரண்டாம் தாயாம் மண்ணையும்
  காணத்துடித்த பரவசம்..
  கவிதை வடிப்பில் அவசரம்..

  " ஊருக்குப் போகிறேன்"..
  திருத்தம்:-

  விளங்காதவனின்..
  தேன் சுரக்கும்..
  வாழ்க்கையை..
  மேடாக்கிடலாம்..
  தீர்த்துக்கணும்..
  சேர்த்து வச்ச..
  ஒரேயடியா..
  பாக்க போறேன்..
  தெக்காம..
  இடிச்சாலும்..
  மொழுகி..
  நீச்சலடிச்சு..
  சீகக்காயும்..
  வெந்தயமும்..
  மோட்டார்..
  ஆத்தா..
  மிச்சத்தில்..
  செஞ்சாளோ..
  அதிசயமா..
  சுதந்திரம் இல்லா..
  நாளு..
  பாக்க போறேன்..
  உயிர பாக்க..
  சோர்ந்து..

  ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்