Saturday, January 7, 2012

புத்தகக் கண்காட்சி

அவனவன்
தன் தன் மூளையை
பேனா என்னும் அலகியால்
நகலெடுத்து அடுக்கி 
நிறைத்தனர் அரங்கம் முழுக்க


என் ஒரு பணப்பையை
காலி செய்து அறிவுப்பை 
நிறைந்துகொண்டிருந்தது

நவீன உலகம்
வேகம்  அதிகம்
அன்னையையும் அப்பாவையும்
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு
வாரிசுக்கு கதை சொல்ல
சீடியில் சிமுலேடேட் தாத்தாவை 
வாடகைக்கு வாங்கும் கூட்டம்


காலம் அழிக்கும் மொழிகள்
கலைஞனுக்கு ரத்த தானம் கொடுத்து
எழுத்தாய் மறுபிறப்பெடுத்து
வாழும் குவியல்


தேன் சுரக்கும்பூவை
வண்டு  மொய்க்கும் இயல்பு
தமிழ் கடலில் மோதிய
அலை பார்க்கையில்
தமிழ் வாழும் என்று 
நம்பிக்கை வந்தது

ஒரு சில பதிப்பகங்ளில்
அறிவு முட்டாள்தனத்தில் 
கட்டிகொடுக்கப்பட்டது போல்
புத்தகம் விற்பனையானது பாலிதீன் பைகளில்


1 comment:

  1. பணப்பை என்றும்
    பரிதாபமாக தான்
    வீடு திரும்பும்.,
    புத்தகக் கடைக்கு.,
    அப்பாவுக்கு,
    பின்னே சென்றால்!

    புத்தகம் ஒன்று கேட்டால்,
    நூறு வாங்கிக் குவிக்கும்.,
    பெரிய மனிதர்
    என் அப்பா!!! :)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்