பட்டாசுகள் வெடித்து
சிதறுகையில்,
எல்லோர் இருதயமும்
வண்ணத்தில் களித்திருக்கையில்
என் மனம் மட்டும்
வானை கரியாக்கும்
புகையிலும் பூமிக்கு
பூமாரித் தூவும் வெத்து
காகிதத்தில் லயித்து
வருந்துவது ஏனோ?
பசுமை பசுமை
என்று இதழ்கள்
புலம்ப …
பூமிக்கு மாரடைப்பு
வரவைக்கும் பட்டாசை
கைகள் கொளுத்துவது நியாமா!
சரியாக சொன்னீர்கள்... இனி வெடிகள் வெடிப்பதை தவிர்ப்போம்.... பதிவுகளில் கடிகள் போட்டு மற்றவர்களை சந்தோசப்படுத்துவோம்
ReplyDeleteநிச்சயம் தோழா! சிரிப்போடு கொஞ்சம் சிந்தையும் தருவோம் உலகுக்கு. கருத்துக்கு நன்றி
ReplyDelete