Wednesday, November 2, 2011

மின்சார சிலந்தி

அலையாய் பாயும்
ஆண் மனதை அடக்கிப்போடும்
பெண்மையின் ஓரவிழிக்கும்

உலையாய் கொதிக்கும்
பெண்மையின் மனதை கட்டிப்போடும்
துணைவனின் அன்பு மார்புக்கும்

பெரும் போட்டியாய்
இணையம் 

உடல் ஏறா போதை இது
உண்மை உலகின் 
சுவாசம் மறந்து 
மின்சார உலகுக்குள் வாசம் 

உண்மை உணரும் நாள் 
என்றோ?
நினைவு திரும்பும் நாள் 
என்றோ?

1 comment:

  1. உண்மை உலகின்
    சுவாசம் மறந்து
    மின்சார உலகுக்குள் வாசம் .

    பாராட்டுக்கள்.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்