Wednesday, November 9, 2011

குப்பை(சான்றிதழ்) குவியல்


படித்த உயிர்கள் 
வெறும் உடல்களாய்
உலாவும் இடங்களில்
குவிந்திருக்கும் குப்பைகள் 
பார்க்கையில்

குப்பைகள் இருப்பது
தெருக்களில் மட்டும் அல்ல
சான்றிதழ்களாய்
படித்தவர்களின் கோப்புகளிலும் தான் 
என்று சிந்திக்குது மனது...

தூசி எரிய அறிவே!
கொஞ்சம் உதறிக்கோள் 
சுதாரித்தேழுந்து
சிந்தி ... வீடுகள் மட்டுமின்றி 

உன்னை சுற்றி 
ஒரு அடி சுற்றளவை
சுத்தமாக்கு போதும் 
தன்னால் உலகம் சுத்தமாகும்!

1 comment:

  1. .. அலுவலகங்களில்..
    அன்றாடம் காணும்.. கேவலம்..
    குப்பையான கோப்புகள்..
    ஊழியர்களின் எண்ணம்போல்..

    தூசி ஏறிய அறிவே..
    சுதாரித்தெழுந்து..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்