வான் தேசத்தில்
சுதந்திர தினம்
மின்னிப் பறக்குது
ஏழு வர்ணக் கொடி
வெறும் நேர் கோடுகள்தான்
இருந்தும்
இதற்கு இணையாய்
அழகான மற்றொரு
ஓவியம் உண்டோ?
அப்படி என்ன
இவள் காதலன் சொல்லிவிட்டான்
இந்த வான் பேதை மட்டும்
எழு வண்ணத்தில்
வெட்கப்படுகிறாள்
மழை சீதையின்
சுயம்வரத்தில்
அந்த சூரிய ராமனின்
கைத் தீண்டலில் துகளாகத்
தானோ இந்தக் கம்பீர தனுசு?
விருந்தாளியாய் மழை
வந்துபோன பிறகு எதற்கு
ஏழு வர்ணத்தில் கம்பளம்
வரவேற்பு வெளியில்?
இயற்கையை இதிகாசத்துடன் ஒப்பிட்ட அழகை பாராட்டலாம்.
ReplyDeleteதிருத்தம்:-
ஏழு வர்ணக் கொடி..
வந்து போன பிறகு..