Friday, November 4, 2011

உளறல் கவிதை


பழந்தமிழ்...
தேனூறும் பைந்தமிழ் 
தூசி தட்டி 

உயிரை மையாக்கி 
உண்மை இறகு இட்டு
இரவு தூக்கம் விட்டு

என் கற்பனைக்கு 
அடைக்கலம் கொடுத்தே
தன் கற்பம் கலைந்த
ரிக்கார்ட் நோட்டு
என் எண்ணம் ஏற்ப
பிறவா கவிதை 
கசங்கிய காகித்ததுக்குள் சிறையாகி 
குப்பை கூடை நிறைய 
எழுதிய கவிதை

பரிட்சைக்குக் கூட 
விழிக்கா கண்
விழித்து விழுங்கும்
வரிகளானக் காதலை

இப்படி அப்படி
முட்டி மோதி
தயாரான என் காதல்
அவளை சேருவது 
என்னவோ
உளறல்களலயே!

1 comment:

  1. sema da jam,,,really realy nice wordings,,,,realy words r playng with u da,,,,,super pic selection,,,,enga vachuruka inthana creativity???!!!!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்