Wednesday, November 9, 2011

பிஞ்சுக் காதல்


தன் தேவையை 
வார்த்தையாய் தரத் தெரியாமல்
கண்ணீரில் கரைந்து போகும் 
மழலையின் ஏக்கம்...
எதோ கிடைத்த
ஒன்றில் தன் தேவை 
மறந்து சமாதானம் ஆகி
உறக்கத்தில் ஆழ்வது 
போல!

என் காதல் இருதயமும்


நிஜம் மறந்து 
கனவில் லயித்து
உன் நினைவுகளின் 
சுவடிட்ட வலி மறக்க முயலுது

1 comment:

  1. புறத்தை இதமாக தழுவும் தென்றல் போல் ..
    அகத்தை மென்மையாக வருடும் கவிதை..
    அழகே அழகு..

    கன்னத்தில் நீரோவியம்..
    கண்களில் உயிரோவியம்..
    முகத்தில் எழுத்தோவியம்..
    மழலையே ஒரு காவியம்..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்