Sunday, November 20, 2011

துணி


இறகுத் துடுப்பு போட்டு
காற்றில் மிதக்கலாம் 
என்று முதல் பறவை 
முயலாதவரை இனம் அறியா!

தேனீ முத்தம் பெறாமல்
தேன் சுவைக்கும் என்று 
இதழ்கள் அறிந்ததெப்படி 

ஆழம் பாராமல்
காலை விடத்
தடை சொல்லும் ஊரே!

தினவு கொண்டு 
இறங்கிப் பார்
அப்போது தெரியும் 
அது கணுக்கால் அழ 
வெட்டை என்று...


2 comments:

  1. முடியாது
    என செப்பித் திரியும்
    சோம்பேறிகளுக்கு சாட்டையடி..
    துணி..

    இதையும் சரி செய்.. இளங்கவியே..

    *அறிந்ததெப்படி..?

    *அப்போது தெரியும்..

    சுள்ளான் கவியின்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. நன்றி சுள்ளான் கவியே...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்