Monday, January 31, 2011
Sunday, January 30, 2011
Thursday, January 27, 2011
Wednesday, January 26, 2011
6 2 வது குடியரசுத் தினம்
செக்கிழுத்து கல்லுடைத்து
என் முத்தோன் சிந்திய
செங்குருதிகளை சிகப்புக் கம்பளங்களக்கி
தாங்களே வரவேர்த்துக்
கொண்டார்கள் தங்கள் உழல்களை...
திருந்தவில்லை இன்னும் என் தேசம்
கோவிலில் அர்ச்சனை சிட்டுக்கள்
கடவுளின் அருளை கூட்டுகிறது
வோட்டு சிட்டு நேரம்,
அத்தியாவசியத்தின் விலையை குறைக்கிறது
(என்ன, அத்தியாவசியம் எது என்பது
இன்னும் சந்தேகம்)
இந்த கவிதைகளில்கூட
வார்த்தைகள் கொஞ்சம் கட்டமாக பொய்
விட்டால் என்மேல் பொய்
வழக்குகள் பாயும்...பயப்படும்
அபலை மக்களாட்சி நாட்டின் குடிமகன்
ஓட்டை போடும் இயந்திரமும்
ஒட்டு போடும் மனிதனும் ஒன்று ...
அங்கே அழுத்துவது கரங்கள்...
இங்கே பணக் கற்றைகள்...
மரத்திற்காய் ஒரு மனு(நிறைவேறும் ஆசையில்)
"மரம் வளர்ப்போம்" என சொல்ல
விளம்பரப் பலகைகளாக...
விழிப்புணர்வு காகிதங்களாக...
மாறாத மனிதனை மாற்ற
போராடி உயிர்விடும் மரமே!
தொட்டில்களாக, கட்டில்களாக,
உனது சடலங்களுக்கு சுடுகாட்டு மெத்தைகளாக
தினம் தினம் மரத்திற்கு
மரணத்தை விதிக்கும் மனிதா!
இவைகள் வெட்டியெறிய
நகங்கள் அல்ல...
வலியின்றி விழும் விரல்கள்...
உறுப்புகள் இழந்தால் மீள வழியில்லை
உடன் பிறவா உறுப்பாம் விரலை மீட்க
விதைகலென்னும் சமுராய் கிடைத்துள்ளான்
உனக்காய் பசுமை புரட்சி செய்ய...
துகளாகி தூசாகி மசாகி போன
பசுமையாக்கி பூமியை மீட்டெடு...
மரங்களும் விதைகளும்
உனை முதுமை இல்லம் சேர்க்க
வாரிசுகள் மறவாதே மாறாத மனிதா!
Sunday, January 23, 2011
கதவாய் = காது + வாய்
கையளவு கதவு
வழியே மனிதன்
தவறி விழுந்தான்
அவன் எதிர்காலத்துக்குள்ளே...
ஒரே உறுப்பு
ஒட்டுண்ணியாய் மனிதனை
சேர்ந்தது ,,, நன்மை செய்ய
அது கேட்கவும் செய்யும்
பேசவும் செய்யும்
விசித்திர உறுப்பு...
போதையாகி போன உறுப்பு
ஒரே உறுப்பு
ஒட்டுண்ணியாய் மனிதனை
சேர்ந்தது ,,, நன்மை செய்ய
அது கேட்கவும் செய்யும்
பேசவும் செய்யும்
விசித்திர உறுப்பு...
போதையாகி போன உறுப்பு
விதை ஒன்று போட்டு
விருத்ச்சங்கள் தானே
விரிந்ததுண்டு சுருங்கியதில்லை
இங்கே நுட்பத்தின் நுற்றாண்டில்
விதைத்த கணினி
கையளவு சுருங்கிய விந்தையென்ன?
கையளவு மன்னன் மனிதனை
அள்வதென்ன?
Saturday, January 22, 2011
Friday, January 21, 2011
Wednesday, January 19, 2011
தொடருமடி
புகை...சுவாசம்
சேரும் வரை...
உன் நினைவு
என் நெஞ்சில் நீளும் வரை...
காயங்கள் தொடருமடி
என் வாழ்கை அத்தியாயத்தில்...
சேரும் வரை...
உன் நினைவு
என் நெஞ்சில் நீளும் வரை...
காயங்கள் தொடருமடி
என் வாழ்கை அத்தியாயத்தில்...
வேல்விழியால்
என் கரமிருந்து
ஒரு மயிலிறகு தவறி
விழுந்தது அவள் விழியாருகே...
குழம்பி போனேன்
அருகில் போன நான்...
எது இரகேன்று...
உயிர் வாங்கிய விழியால்...
வேல்விழியால்
ஒரு மயிலிறகு தவறி
விழுந்தது அவள் விழியாருகே...
குழம்பி போனேன்
அருகில் போன நான்...
எது இரகேன்று...
உயிர் வாங்கிய விழியால்...
வேல்விழியால்
Monday, January 17, 2011
அறிகுறிகள்
- மெலிதாய் பேசும் மார்கழி பனிகூட சுட்டெரிக்கும்...
- உண்ணாமலே பசி மறக்கும்...
- நரம்புகள் போல் பயாவேண்டிய மூளை சிந்தனை சிறுபிள்ளை கிசிய கோடுபோல் உனை நோக்கியே பாயும்...
- இப்படி கோடி இருக்கும் எழுத இருந்தும் வார்த்தைகள் சிக்கும் கவிக்கு...
இந்த சுகம் மட்டுமல்ல
சொல்லத் தெரியாத வலியும்
உணர்கிறேன் உன்னால்
சுயநல நிழல்கள்
செய்தித் தாளில்
"கோர விபத்துச் செய்தி"
நம் உறவினர்
யாருக்கும் எதுவும்
ஆகவில்லை என
அறியும்வரை மட்டும்
இறைவனை வேண்டும்
இதயங்கள் தான்
இன்னும் கறையாய் தொடரும்
சுயநலத்தின் நிழல்கள்
"கோர விபத்துச் செய்தி"
நம் உறவினர்
யாருக்கும் எதுவும்
ஆகவில்லை என
அறியும்வரை மட்டும்
இறைவனை வேண்டும்
இதயங்கள் தான்
இன்னும் கறையாய் தொடரும்
சுயநலத்தின் நிழல்கள்
Sunday, January 16, 2011
கடினம்
இது என்ன விந்தை
காதலின் பள்ளிகளில்
பாடத்தை படிப்பது
எளிது...
மறப்பதுதான் கடினமாக
இருக்கிறது...
எனக்கு உன் நினைவும்
அப்படித்தான்...
காதலின் பள்ளிகளில்
பாடத்தை படிப்பது
எளிது...
மறப்பதுதான் கடினமாக
இருக்கிறது...
எனக்கு உன் நினைவும்
அப்படித்தான்...
உண்மையாகுமோ!
சாமியின் சிலையே
மறைக்கும் அளவுக்கு
இன்று சாமியார்களுக்கு
நாட்டப்படும் விளம்பர
பலகைகளை பார்க்கையிலே
"பிள்ளையாரே எலியில் போகையில்
பூசாரிக்கு ____ கேக்கும் போல" என்னும்
பழமொழி உண்மையாகும் எனத்
தோன்றுகிறது
மறைக்கும் அளவுக்கு
இன்று சாமியார்களுக்கு
நாட்டப்படும் விளம்பர
பலகைகளை பார்க்கையிலே
"பிள்ளையாரே எலியில் போகையில்
பூசாரிக்கு ____ கேக்கும் போல" என்னும்
பழமொழி உண்மையாகும் எனத்
தோன்றுகிறது
கவனமாக!
Wednesday, January 12, 2011
எல்லை இல்லை
- காதலின் சொல்லுக்கு
- அரசியல்வதியின் ஆசைக்கு
- ஜாதி மேல் காதலன்
- மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் இதயத்திற்கு
Tuesday, January 11, 2011
நீ சிரித்து
பூக்கள் மலர
எவரும் பார்த்ததில்லையாம்
சொன்னான் ஒரு கவிஞன்...
அது உண்மைதான்
நீ சிரித்து
நான் பார்க்கும் வரை...
எவரும் பார்த்ததில்லையாம்
சொன்னான் ஒரு கவிஞன்...
அது உண்மைதான்
நீ சிரித்து
நான் பார்க்கும் வரை...
Monday, January 10, 2011
பொருள்படாது
"மூ", "ன்", "று"
என்று பிரிந்தது
பொருள்படாது
முன்று என்று
ஒன்றாகையில்
பொருள் படும்
குழந்தைகள் பலவாய்
இருக்கலாம் ஆனால்
அந்தக் கருவிற்கு உயிர்
கொடுத்த தாய் ஒன்றே
சங்கமிக்காதவரை
காதல் மனமும் சரி
கடவுள் மதமும் சரி
சுவை தராது..
Sunday, January 9, 2011
நூல் சரடு
உன் நினைவையும்
என் உயிரையும்
திரிந்து செய்தது
ராமானுஜ நூல்...
நினைவை அகற்றுதல்
உலகின் நினைவில்
ராமானுஜத்தை அகற்றும்
முயற்சியே!
என் உயிரையும்
திரிந்து செய்தது
ராமானுஜ நூல்...
நினைவை அகற்றுதல்
உலகின் நினைவில்
ராமானுஜத்தை அகற்றும்
முயற்சியே!
மூக்குத்தி
மனித மேனியில் மச்சம்
வைத்தவன் படைத்திட்ட
இறைவன்
அவள் பெற்றோர் இறைவனை
மிஞ்சியவர்கள்தான்
அதன் அவளுக்கு
தங்கத்தில் மச்சமிட்டிருக்கிறார்கள்
வைத்தவன் படைத்திட்ட
இறைவன்
அவள் பெற்றோர் இறைவனை
மிஞ்சியவர்கள்தான்
அதன் அவளுக்கு
தங்கத்தில் மச்சமிட்டிருக்கிறார்கள்
Wednesday, January 5, 2011
ஏமாற்றியதில்லை இவள்
ஆண்கள் காதலித்து
அவர்களை ஏமாற்றாத
ஒரே காதலி
அவர்கள் கவி வரி
வாழும் வார்த்தைகள் தான்
என்னையும் ஏமாற்றியதில்லை இவள்
அவர்களை ஏமாற்றாத
ஒரே காதலி
அவர்கள் கவி வரி
வாழும் வார்த்தைகள் தான்
என்னையும் ஏமாற்றியதில்லை இவள்
Tuesday, January 4, 2011
எதிர்(ரி) வினை
வினைகள் ஓவன்றிர்க்கும் சமமான எதிர்வினை உண்டு
என்றன் நியூட்டன்...
ஏனோ என் மனதை பிரிந்த
அவளிடத்தை அந்த கடவுள்
நினைத்தாலும் நிறைக்க முடியவில்லை
என்றன் நியூட்டன்...
ஏனோ என் மனதை பிரிந்த
அவளிடத்தை அந்த கடவுள்
நினைத்தாலும் நிறைக்க முடியவில்லை
Sunday, January 2, 2011
வாழ்ந்துப பார்
உயிர் போகும்
நிமிடங்களை உயிர் போகாமல்
உணரவேண்டுமா?
முதுகின் மேல் குடும்ப சுமையும்
கண்முன்னே நேர்காணலும் இருக்கும்
நொடியில் வாழ்ந்து பார்
அதனினும் கொடிது
முடிவிற்குக் காத்திருக்கும் அந்த நொடிகளே...
நிமிடங்களை உயிர் போகாமல்
உணரவேண்டுமா?
முதுகின் மேல் குடும்ப சுமையும்
கண்முன்னே நேர்காணலும் இருக்கும்
நொடியில் வாழ்ந்து பார்
அதனினும் கொடிது
முடிவிற்குக் காத்திருக்கும் அந்த நொடிகளே...
விசித்திரம்
அவளும் நானும்
ஒரு விசித்திரக் காந்தங்கள்
தூரங்கள் எவ்வளவு விலகினும்
அந்த ஈர்ப்பு விசை
மட்டும் குறைவதில்லை
காதலியுங்கள்
அறிவுரைகள் மட்டுமல அறிவியலும்
பொய்யாய் தெரியும் ...
ஒரு விசித்திரக் காந்தங்கள்
தூரங்கள் எவ்வளவு விலகினும்
அந்த ஈர்ப்பு விசை
மட்டும் குறைவதில்லை
காதலியுங்கள்
அறிவுரைகள் மட்டுமல அறிவியலும்
பொய்யாய் தெரியும் ...
கூரிழந்த முனையே
ஜாதி எண்ணும் உலோகம்
இன்றி செய்த கத்தியாகிவிட்டேன்...
அதான், விரைவில் கூரிழந்து
காதலின் சமயலறையில்
அவள் கரங்களில் விளையாடும்
புண்ணியம் நான் செய்யவில்லை...
இன்றி செய்த கத்தியாகிவிட்டேன்...
அதான், விரைவில் கூரிழந்து
காதலின் சமயலறையில்
அவள் கரங்களில் விளையாடும்
புண்ணியம் நான் செய்யவில்லை...
ஒன்றே
கொடுக்கிழந்த தேனீபோலத்தான்
உன் காதலிழந்தேன் ...
இருந்தும் உயிர்மட்டும்
பிரிய மாறுகிறதே ...
மனிதப் பிரப்புவேண்டுமானால்
ஏழாக இருக்கலாம் ...
மனிதன் கொண்ட காதலின் பிறப்பு
ஒன்றே...
உன் காதலிழந்தேன் ...
இருந்தும் உயிர்மட்டும்
பிரிய மாறுகிறதே ...
மனிதப் பிரப்புவேண்டுமானால்
ஏழாக இருக்கலாம் ...
மனிதன் கொண்ட காதலின் பிறப்பு
ஒன்றே...
Saturday, January 1, 2011
போதாது
நாட்குறிப்பு தேயலாம்
கடிகார முட்கள் தங்கள்
இடத்தை மாற்றலாம்...
கோடி யுகங்கள் கொடுத்தாலும்
காதலை மறக்க போதாது
உணரா மறுத்தாலும் சகியே
மெய்யை மயக்கி பொய்யாக்க முடியாது
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று எழுதியவன்
காதலித்திருந்தால் மற்றிருப்பான் தான் கருத்தை
கடிகார முட்கள் தங்கள்
இடத்தை மாற்றலாம்...
கோடி யுகங்கள் கொடுத்தாலும்
காதலை மறக்க போதாது
உணரா மறுத்தாலும் சகியே
மெய்யை மயக்கி பொய்யாக்க முடியாது
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று எழுதியவன்
காதலித்திருந்தால் மற்றிருப்பான் தான் கருத்தை
நேற்று இன்று நாளை
நேற்று:
அச்சாணி உடைக்க நினைத்த
அந்நியனின் அசாணியையே
ஆட்டம் காண வைத்த
அரசியல்கள், அரசியல் தலைவர்கள்
தேசம் வளம் கோழிக்க
வளம் இழந்த செமல்கள்
கண்கள் மட்டும் பேச
காமம் தெரியாத
மழழை வாசம் பேசும்
தெய்விகக் காதல்
இன்று:
காதலென்றால் என்ன,
காமம் என்றால் என்ன
உணர்வுகளின் வலிகள் உணரா
முட யுகத்தில்
கடவுளை பார்க்கும்
தூரங்களை நிர்ணயிப்பதே
பணமாகிப் போகையிலே
அந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்
நாளை:
குரங்குபோல் தாவும்
மனித மனதின் நாளையை
கணிப்பது அவனை
ஜனிக்க வைத்த
கடவுளுக்கே எட்டாக் கனி
வெட்கும்
தான் பிறந்த
மண் நினைத்து
வெட்கிய சிசு உண்டோ
கரை படிந்த மண்ணில்
பிறந்தோமே என்று
குரளும், வேதமும் வெட்கும் நாளை
நாளை வெகு தொலைவில்
வைக்கவில்லை இந்தியன்
நாளை வெகு தொலைவில்
வைக்கவில்லை இந்தியன்
அவள்
கனவு போல்தான் இருந்தது
கனலாய் அவள்பிம்பம்
என் நெஞ்சில் விழ்ந்தது ...
அதன் வலி நெஞ்சை
விட்டு நிங்காத
நொடிகளில் உணர்ந்தேன்
நானும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்
கனலாய் அவள்பிம்பம்
என் நெஞ்சில் விழ்ந்தது ...
அதன் வலி நெஞ்சை
விட்டு நிங்காத
நொடிகளில் உணர்ந்தேன்
நானும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்
குடிமகனே!
காட்சியகம் வந்த
பார்வையாளன் போல் ஆனான்
குடிமகன், கண்முன் நடக்கும்
பிரச்சனைகளிடம்...
கண்டாலும் காணாத கண்கள்
தன்னை நெருங்கும்வரை
கவலை கொள்ளாத எண்ணங்கள்
இவைகள் நடை பாதை பூக்கள் அல்ல
வழிப்போக்கனாய் ரசித்திருக்க ...
இவைகள் தம்தம் புத்தகத்தின் பிழைகள்
நம் பாதை முட்கள்
திருத்தபடாவிடில் கேடு நமக்கென்று
உணர்வாய் குடிமகனே!
புது ஆண்டின்
துவக்கத்தை
நம் நல்லெண்ண மலர்களால் வரவேற்போம்
வாழ்த்துக்களோடு JAM
Subscribe to:
Posts (Atom)