"மரம் வளர்ப்போம்" என சொல்ல
விளம்பரப் பலகைகளாக...
விழிப்புணர்வு காகிதங்களாக...
மாறாத மனிதனை மாற்ற
போராடி உயிர்விடும் மரமே!
தொட்டில்களாக, கட்டில்களாக,
உனது சடலங்களுக்கு சுடுகாட்டு மெத்தைகளாக
தினம் தினம் மரத்திற்கு
மரணத்தை விதிக்கும் மனிதா!
இவைகள் வெட்டியெறிய
நகங்கள் அல்ல...
வலியின்றி விழும் விரல்கள்...
உறுப்புகள் இழந்தால் மீள வழியில்லை
உடன் பிறவா உறுப்பாம் விரலை மீட்க
விதைகலென்னும் சமுராய் கிடைத்துள்ளான்
உனக்காய் பசுமை புரட்சி செய்ய...
துகளாகி தூசாகி மசாகி போன
பசுமையாக்கி பூமியை மீட்டெடு...
மரங்களும் விதைகளும்
உனை முதுமை இல்லம் சேர்க்க
வாரிசுகள் மறவாதே மாறாத மனிதா!
i got 3rd prize for this poem...
ReplyDelete