செக்கிழுத்து கல்லுடைத்து
என் முத்தோன் சிந்திய
செங்குருதிகளை சிகப்புக் கம்பளங்களக்கி
தாங்களே வரவேர்த்துக்
கொண்டார்கள் தங்கள் உழல்களை...
திருந்தவில்லை இன்னும் என் தேசம்
கோவிலில் அர்ச்சனை சிட்டுக்கள்
கடவுளின் அருளை கூட்டுகிறது
வோட்டு சிட்டு நேரம்,
அத்தியாவசியத்தின் விலையை குறைக்கிறது
(என்ன, அத்தியாவசியம் எது என்பது
இன்னும் சந்தேகம்)
இந்த கவிதைகளில்கூட
வார்த்தைகள் கொஞ்சம் கட்டமாக பொய்
விட்டால் என்மேல் பொய்
வழக்குகள் பாயும்...பயப்படும்
அபலை மக்களாட்சி நாட்டின் குடிமகன்
ஓட்டை போடும் இயந்திரமும்
ஒட்டு போடும் மனிதனும் ஒன்று ...
அங்கே அழுத்துவது கரங்கள்...
இங்கே பணக் கற்றைகள்...
No comments:
Post a Comment